2026-ல் விஜய் கட்சியுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
|அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .
கோவை,
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அத்திகடவு – அவினாசி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு இப்போது திறந்து வைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எல்லாம் வேண்டுமென்ற ஆமை வேகத்தில் நடக்கின்றன. எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. .
அதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்க பணியும் கிடப்பில் இருக்கிறது. வெள்ளலூர் ரூ.168 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் 50% பணிகள் முடிந்த பிறகும் அதை கிடப்பில் போட்டுள்ளார்கள். பொய்யான நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது தி.மு.க.அரசு விழிபிதுங்கி நிற்கிறது.என தெரிவித்தார் .
மேலும் 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமையுமா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ,
தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது .தேர்தல் நேரத்தில் தான் இது குறித்து சொல்ல முடியும் என தெரிவித்தார்.