< Back
மாநில செய்திகள்
அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம் - கவர்னர் ஆர்.என்.ரவி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம் - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
12 Dec 2024 11:38 AM IST

அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி,

அகிலத்திரட்டு அம்மானை, அய்யா வழி பக்தா்களின் புனித நூலாகும். அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் காா்த்திகை மாதம் 27-ம் தேதி ஆகும். இந்த நாளை அய்யாவழி பக்தா்கள் ஒவ்வொரு வருடமும் அகிலத்திரட்டு உதய தினமாகக் கொண்டாடி வருகின்றனா்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, "அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட வேண்டும் என்று சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம்; வேறு உடை அணியலாம்; ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றுதான்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்