< Back
மாநில செய்திகள்
விமான நிலைய விரிவாக்கம்: போராட்டம் தற்காலிக வாபஸ்
மாநில செய்திகள்

விமான நிலைய விரிவாக்கம்: போராட்டம் தற்காலிக வாபஸ்

தினத்தந்தி
|
17 Nov 2024 11:18 AM IST

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதியை சுற்றி உள்ள கிராம மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் இடம் கொடுத்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மாநகராட்சி எல்கைக்குள் தங்களுக்கு 3 சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து சின்ன உடைப்பு கிராம மக்களுடன் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை கண்டித்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மீது ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சின்ன உடைப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. வீடுகளை காலி செய்ய 6 நாட்கள் (ஒருவாரம்) அவகாசம் அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும்: மாற்று இடம் கொடுக்க முடியாது என்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்