< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என குறிப்பிட்ட அதிமுக எம்.எல்.ஏ.
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என குறிப்பிட்ட அதிமுக எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
25 March 2025 1:23 PM IST

அதிமுக எம்.எல்.ஏ. கே.சி.கருப்பண்ணன் அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என குறிப்பிட்டார்.

சென்னை,

சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

அப்போது அதிமுக எம்.எல்.ஏ. (பவானி தொகுதி) கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், தனியார் நிறுவனங்கள் சோலார் மின்தகடுகளை அதிகமாக தயாரிக்கின்றன. அவை 100 கேவி திறன் கொண்டதாக உள்ளன. அவற்றை 120 கே.வி திறன் உள்ளதாக அனுமதிக்க வேண்டும்.

இதனால் மின்வாரியத்திற்கு எந்த நட்டமும் ஏற்படாது. இதற்கு மாப்பிள்ளை ( அமைச்சர் செந்தில் பாலாஜி) அனுமதிக்க வேண்டும் என்றார். அதிமுக எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது சாரி… சாரி... என்று கூறி கருப்பண்ணன் சமாளித்தார்.

மேலும் செய்திகள்