
கோப்புப்படம்
வேளாண் நிதிநிலை அறிக்கை: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொதுமக்கள் கருத்துகளை உழவர் செயலி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
2025-2026 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் - திட்டங்கள் குறித்து tnagribudget2025@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மண்ணைப் பொன்னாக மாற்றும் நம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி 2021-2022ம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையானது ஐந்தாவது முறையாக வரும் மார்ச்-15ம் தேதி சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பொருட்டு, இந்த நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய, பிரத்தியேகமாக உழவர் செயலியில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, மேலும் tnagribudget2025@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.