< Back
மாநில செய்திகள்
5 நாட்களுக்குப் பின் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை
மாநில செய்திகள்

5 நாட்களுக்குப் பின் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை

தினத்தந்தி
|
7 Nov 2024 8:46 PM IST

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.

நீலகிரி,

ஊட்டி, குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக, கல்லாறு - குன்னூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டு இருந்தது.

மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே நாளை முதல் வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதனை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்