< Back
மாநில செய்திகள்
விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து அதிமுக பேசவே இல்லை: ஜெயக்குமார்
மாநில செய்திகள்

விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து அதிமுக பேசவே இல்லை: ஜெயக்குமார்

தினத்தந்தி
|
19 Nov 2024 7:18 AM IST

தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக ஒரு கருத்தை சொல்லியுள்ளார். பாஜக அல்லாத ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம்.

தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசப்படும். எந்த கட்சி, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்கிறதோ அவர்கள் எங்களிடம் வரலாம். இதுவரை நாங்கள் கூட்டணி தொடர்பாக விஜய் உள்ளிட்ட எந்த கட்சிகளுடனும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்