< Back
மாநில செய்திகள்
சென்னையில் அ.தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

சென்னையில் அ.தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 Jan 2025 8:30 AM IST

அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பதவியேற்ற கடந்த 44 மாத காலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள், கொலை-கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்ற ஞானசேகரன் என்கிற நபர் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினருடனும் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. குற்றவாளிக்கு ஆளும் கட்சியோடு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது அம்பலப்பட்டுப்போயிருக்கிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய, தி.மு.க. ஆட்சியைக் கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்