< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை: தொடர் கொலைகளால் மக்கள் அச்சம்
|4 Nov 2024 12:47 PM IST
அ.தி.மு.க. கிளை செயலாளர் கணேசன், இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் கணேசன் (70). அ.தி.மு.க. கிளைச் செயலாளரான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கடையை திறக்கச் சென்ற அவரை, மர்மநபர் ஒருவர் வெட்டிவிட்டு தப்பினார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கொலை செய்த அதே நபர், முன்னதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரையும் வெட்டினார். ஆனால் அவர் தப்பியோடியதால் உயிர் தப்பினார்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை முடிந்தநிலையில் அங்கு தொடர்ந்து 3 கொலைகள் நடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.