< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
வைகை, பல்லவன் ரெயில்களில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைப்பு

13 March 2025 8:22 PM IST
வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரெயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் விரைவு ரெயிலில் (12605) மே 11 ம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரெயில் (12635) மற்றும் காரைக்குடி - சென்னை எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரெயிலில் (12606) மே 12ம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்
முன்பதிவில்லாத ரெயில் பெட்டி இணைக்கப்படும் நிலையில், இரண்டு ரெயில்களிலும் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
