சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - பயணிகள் மகிழ்ச்சி
|சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
நெல்லை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681-20682) சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.17 பெட்டிகளுடன் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வந்த நிலையில் அதில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்க தென்னக ரெயில்வே உத்தரவு வழங்கி உள்ளது. வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி வரை இந்த கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.