< Back
மாநில செய்திகள்
நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு: பாஜக கண்டனம்
மாநில செய்திகள்

நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு: பாஜக கண்டனம்

தினத்தந்தி
|
4 Nov 2024 3:39 PM IST

சர்ச்சை பேச்சை திரும்ப பெறுவதோடு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பி இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

பின்னர் இன்று காலையில் தனது பேச்சுக்களை திரித்து சிலர் வெளியிட்டதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தெலுங்கர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு பாஜக கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இதுதொடர்பாக கூறுகையில்,

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசி உள்ளார். தமிழர்களும், தெலுங்கர்களும் சகோதர்கள் போல் உள்ளனா். நடிகை கஸ்தூரியின் பேச்சு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. சர்ச்சை பேச்சை திரும்ப பெறுவதோடு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும். தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்