< Back
மாநில செய்திகள்
நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை
மாநில செய்திகள்

நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை

தினத்தந்தி
|
11 Nov 2024 10:55 AM IST

டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருந்தன. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே டெல்லி கணேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லி கணேஷ் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ் உடல் மீது தேசியக்கொடி போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்