'பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு' - விஜய்யை மறைமுகமாக சாடிய நடிகர் போஸ் வெங்கட்
|நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.
சென்னை,
மெட்டி ஒலி' தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். 'கன்னிமாடம்' , 'சார்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சை மறைமுகமாக நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
அதன்படி, அவர் அந்த பதிவில், 'யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..' இவ்வாறு தெரிவித்துள்ளார்.