கள்ளக்காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை கணவரின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்த இளம்பெண்
|வனத்துறை ஊழியரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார்.
குமரி,
குமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி 8 மற்றும் 4 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் கருத்து வேறுபாடால் கணவரை விட்டு பிரிந்த அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இதனை தொடர்ந்து இளம்பெண், கேரள மாநிலம் வெள்ளறடையிலுள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
அந்த சமயத்தில் கேரள மாநிலம் அம்பூரி பகுதியைச் சேர்ந்த கணவரின் உறவுக்காரருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர் கேரளாவில் வனத்துறை ஊழியராக உள்ளார். வனத்துறை ஊழியருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் வனத்துறை ஊழியருடன் இளம்பெண் குடும்பம் நடத்த தயாரானார். இதற்காக பெற்றோரிடம் சொல்லாமல் கேரளாவிலேயே அவர் தங்கினார்.
பின்னர் வேலைக்கு சென்ற தனது மகள் மாயமாகி விட்டதாக அவரது தந்தை ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அறிந்த இளம்பெண், தான் வனத்துறை ஊழியரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அதன் புகைப்படத்தை கணவரின் வீட்டு குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். இதை பார்த்த கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வெள்ளறடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அழைத்ததின் பேரில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.