< Back
மாநில செய்திகள்
உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
மாநில செய்திகள்

உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தினத்தந்தி
|
5 Nov 2024 9:40 PM IST

தூக்க மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே எஸ்.பி. மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சிட்டையன் மகன் மணிகண்டன் (வயது 26). இவருக்கும், புவனகிரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளம்பெண் மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் மணிகண்டன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்