< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கவர்னர் மாளிகை எதிரில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் காயம்
|28 Nov 2024 12:31 PM IST
கவர்னர் மாளிகை எதிரில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் காயமடைந்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மெயின் கேட்டுக்கு எதிரில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் நந்தினி என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து காவலர் நந்தினி மீட்கப்பட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரம் முறிந்து சாலையில் விழுந்துள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.