< Back
மாநில செய்திகள்
கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை

தினத்தந்தி
|
25 Nov 2024 4:36 AM IST

மதுரையில் கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி சீமான் நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி மீனாட்சி (வயது 55). இந்த நிலையில், கடந்த 21-ந்தேதி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால், மீனாட்சி மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இதற்கிடையே மறுநாள் காலையில், மீனாட்சியின் வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், போலீசார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது அங்கு மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, அவரது உறவினர் நேரு அளித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்