< Back
மாநில செய்திகள்
கழுத்தளவு தண்ணீரில் அன்னக்கூடையில் வைத்து 3 மாத குழந்தையை மீட்ட வாலிபர்
மாநில செய்திகள்

கழுத்தளவு தண்ணீரில் அன்னக்கூடையில் வைத்து 3 மாத குழந்தையை மீட்ட வாலிபர்

தினத்தந்தி
|
3 Dec 2024 6:38 PM IST

குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவனூர் கிராமத்தில் உள்ள சின்ன கவுண்டர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன். இந்த பகுதியில் வெள்ளத்தின் காரணமாக அங்குள்ள வீடுகளின் முதல் தளம் வரை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வெள்ளநீர் சற்று வடிந்ததை அடுத்து அங்கிருந்து அவர்களை மீட்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பலர் ஈடுபட்டனர் அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பகுத்தறிவு-ரம்யா தம்பதியினர் தங்களது மூன்று மாத கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர்.

அதனை கண்ட பெயிண்டர் வேலை செய்யும் ஆறுமுகம் என்ற வாலிபர் துரிதமாக செயல்பட்டு கயிறு கட்டி 3 மாத குழந்தையை அன்னக் கூடையில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் தலையில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார். வாலிபரின் இத்தகைய செயலை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குழந்தை மீட்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்