< Back
மாநில செய்திகள்
இளம்பெண் காதலிக்க மறுத்ததால் வாலிபர் தற்கொலை
மாநில செய்திகள்

இளம்பெண் காதலிக்க மறுத்ததால் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
10 Nov 2024 4:58 PM IST

வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்யும் கூடத்தில் ஆய்வக நுட்புனராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த இளம்பெண் காமராஜை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காமராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தச்சூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்ற காமராஜ், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்