< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தோழி வீட்டுக்கு சென்று தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
|18 Nov 2024 2:28 PM IST
தோழி வீட்டுக்கு சென்று தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், ராஜாஜி நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தவர்ஷினி (20 வயது). இவர் வீட்டின் அருகே உள்ள தோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தோழி வீட்டிற்கு சென்று தாமதமாக திரும்பிய அமிர்த வர்ஷினியை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அமிர்த வர்ஷினி, தாய் கடைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார் உயிரிழந்த அமிர்தவர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.