< Back
மாநில செய்திகள்
வீட்டிற்கு வந்த பட்டதாரி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர்
மாநில செய்திகள்

வீட்டிற்கு வந்த பட்டதாரி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர்

தினத்தந்தி
|
14 Nov 2024 10:12 AM IST

கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை,

திருப்பூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் கோவையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திடீரென்று அந்த வேலையை அவர் விட்டுவிட்டார். அவர் வேலையில் சேரும்போது கல்வி சான்றிதழை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்து உள்ளனர். அந்த பெண் வேலையை விட்டதால், அந்த நிறுவனத்தினர் கல்வி சான்றிதழை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

கல்வி சான்றிதழ் பெறுவதற்காக, தான் கோவையில் படித்தபோது தனக்கு வகுப்பு பேராசிரியர் சிவபிரகாசம் (45) என்பவரின் உதவியை அவ்ர் நாடினார். அதற்கு அவர் நான் கல்வி சான்றிதழை வாங்கி கொடுப்பதுடன், உனக்கு வேறு இடத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவப்பிரகாசம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு சான்றிதழை வாங்கி வைத்து உள்ளதாகவும், வேறு நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியதுடன் கோவைக்கு வருமாறு அழைத்தார். அதை நம்பி அந்த இளம் பெண் பேராசிரியர் வீட்டுக்கு சென்றார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது பேராசிரியர் திடீரென்று அவரை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதனையடுத்து அந்த வீட்டில் உள்ள குளியலறைக்குள் சென்று இளம்பெண் கதவை பூட்டிக்கொண்டார். அத்துடன் அவர் தனது தோழியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறியதாக தெரிகிறது.

உடனடியாக அவருடைய தோழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் உடனடியாக சிவப்பிரகாசம் வீட்டுக்கு சென்று குளியலறையில் மறைந்து இருந்த அந்த இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்