< Back
மாநில செய்திகள்
நடந்து சென்றபோது நாய் துரத்தியதால் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் மீட்பு
மாநில செய்திகள்

நடந்து சென்றபோது நாய் துரத்தியதால் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் மீட்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 9:40 AM IST

நாய் துரத்தியதால் பயந்து ஓடிய நபர் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவகுமர ராஜா. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து அவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று அவரை துரத்தியுள்ளது. இதில் பயந்து ஓடிய அவர், அந்த பகுதியில் தரை மட்டத்தில் இருந்த 100 அடி ஆழ கிணறு ஒன்றில் தவறி விழுந்தார்.

அவரது கூக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே, பெரிய ஏணி ஒன்றை பயன்படுத்தி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்