< Back
மாநில செய்திகள்
ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது - சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி
மாநில செய்திகள்

'ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது' - சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி

தினத்தந்தி
|
7 Nov 2024 8:36 AM IST

'குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது' என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்த கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார் .

சென்னை,

போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பசுமைப் பூங்காவின் பணிகளை நேற்று அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, குளத்தில் கூட தாமரை வளரவே கூடாது என்று கிண்டலாக பேசினார். அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை கேட்டு அதிகாரிகள் சிரித்தனர்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பா.ஜ.க.வினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் , 'குளத்தில்கூட தாமரை வளரக்கூடாது' என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்த கருத்துக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார் .

இது தொடர்பாக தமிழிசை கூறியதாவது ,

"குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்...தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்". என தெரிவித்தார்

மேலும் செய்திகள்