< Back
மாநில செய்திகள்
தலைக்கேறிய மதுபோதை.. சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபர்
மாநில செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை.. சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபர்

தினத்தந்தி
|
7 Nov 2024 5:55 PM IST

சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் மதுபோதையில் ஒருவர் யோகாசனம் செய்தார். தலைக்கேறிய மதுபோதையில் மேல்சட்டை எதுவும் அணியாமல் அந்த நபர் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.

வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அந்த நபரின் செயல்பாடு இருந்தது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்