< Back
மாநில செய்திகள்
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மாநில செய்திகள்

8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தினத்தந்தி
|
26 Nov 2024 9:08 PM IST

வங்கக்கடலில் நாளை உருவாகும் புயலுக்கு "பெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் புயலுக்கு "பெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 720 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுவடையும். வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்பகுதியை நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்