1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்
|1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார். அவருடைய 2-வது மகளுக்கு 6 வயது ஆகிறது. இவள் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அந்த சிறுமியை, 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றான்.
பின்னர் அவன், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டாள். இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அந்த சிறுவன் மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விசாரித்தனர். அப்போது, சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை சிறுமி தெரிவித்தாள். சம்பவம் குறித்து சிறுமியின் தாய், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.