< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை தீபத் திருவிழா - பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா - பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

தினத்தந்தி
|
7 Dec 2024 9:40 PM IST

தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு உலக அளவில் பிரபலம்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் மகா தீபத் திருவிழா வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. 13ம் தேதி மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவையொட்ட்டி வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை 9 நாட்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்