< Back
மாநில செய்திகள்
சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
மாநில செய்திகள்

சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

தினத்தந்தி
|
3 Dec 2024 6:56 PM IST

சென்னை அம்பத்தூரில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் மத்திய போதைப்பொருள்கள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக 845 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.2.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது.

அதையடுத்து கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் உட்பட 3 பேரை போலீசார் கைதுள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்