< Back
மாநில செய்திகள்
இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
8 Dec 2024 6:48 AM IST

மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாககூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும், மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராமேஷ்வரம் மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்கள் காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின் தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்