< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
18 Nov 2024 11:39 PM IST

நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் சிங்கப்பூர், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 4 விமானங்கள் மற்றும் அங்கிருந்து வருகை தரும் 4 விமானங்கள் என 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 8 விமானங்களும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்