< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை
மாநில செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை

தினத்தந்தி
|
7 Jan 2025 11:49 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவதால் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் தொடர் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்