< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நவம்பர் 7-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
|25 Oct 2024 8:20 PM IST
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ம் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7- ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.