< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தினத்தந்தி
|
11 Nov 2024 8:09 PM IST

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலராக எம்.ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத் துறை ஆணையராக இருந்த சி.சமயமூர்த்தி, மனித வள மேம்பாட்டுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குனராகவும் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்துறை ஆணையர் அதுல் ஆனந்த், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாஹூ, கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குனர் எம்.ஆர்த்தி, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், தேசிய சுகாதார இயக்க இயக்குனராக நியமிக்கப்பட்டு்ளார். அவர் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்