< Back
மாநில செய்திகள்
குமரி மாவட்டத்தில்  4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது
மாநில செய்திகள்

குமரி மாவட்டத்தில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
10 Nov 2024 10:42 AM IST

4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதன்படி நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க மாவட்டம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவானவர்களை பிடித்து வழக்குகளையும் முடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குமரியில் ஒரே நாளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன்படி கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி மோதல் வழக்குகளில் தொடர்புடைய தருமபுரம் பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்ற வாலி (42), தென்தாமரைகுளம் ,பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம் (38), ராமன்புதூரை சேர்ந்த சஞ்சய் பிரபு (23), அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (23) ஆகிய நான்கு பேரை கைது செய்து, மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கைதான 4 பேரின் பெயர்களும் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. தற்போது 4 பேர் கைதாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் ஒரு வருடத்தில் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்