< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 4 கருங்குரங்குகள், 52 அபூர்வ வகை பச்சோந்திகள் பறிமுதல்
|16 Oct 2024 8:28 PM IST
சென்னை விமான நிலையத்தில் 4 கருங்குரங்குகள், 52 அபூர்வ வகை பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை,
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ஆப்பிரிக்காவின் அபூர்வ வகை 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட மலேசிய பெண் பயணி, உயிரினங்களை வாங்கிச் செல்ல வந்த சென்னையைச் சேர்ந்த ஆண் ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த உயிரினங்களில் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் இருக்கும் அபாயம் இருப்பதால், இவற்றை மீண்டும் மலேசிய நாட்டிற்கே விமானம் மூலம் சுங்க அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.