'மூன்றரை ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
|தமிழகத்தில் மூன்றரை ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்பில், தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் பல முதலீடுகள் கொண்டு வரப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவற்றின் மாற்று விகிதத்திற்கும்(Conversion Rate), தற்போதைய மாற்று விகிதத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. சமீபத்தில் முதல்-அமைச்சர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில் மட்டுமே 100 சதவீத மாற்று விகிதம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.