< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேனி அருகே சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு
|31 Oct 2024 9:40 PM IST
தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி,
கம்பம் - கூடலூர் சாலையில் அப்பாச்சி பண்ணை என்ற இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஓரே இரு சக்கர வாகனத்தில் சென்ற கூடலூரைச் சேர்ந்த இளைஞர்கள் லிங்கேஷ், சேவாக், சஞ்சய் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த மோனிஷ் மற்றும் கேசவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.