< Back
மாநில செய்திகள்
சென்னையில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னையில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

தினத்தந்தி
|
2 Dec 2024 6:21 AM IST

சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரெயில், நெல்லை- சென்னை வந்தே பாரத் விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி அருகே ரெயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே ரெயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை சென்று கொண்டிருந்த நெல்லை, குமரி விரைவு ரெயில்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

விழுப்புரத்தில் வெள்ள பாதிப்பு எதிரொலியாக மேலும் 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதன்படி சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- தாம்பரம் ரெயில், புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து இன்று ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் முழு விவரம்:-



மேலும் செய்திகள்