< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
|22 Oct 2024 1:58 PM IST
எரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், எரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.