< Back
மாநில செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ந்தேதி தொழில்நுட்ப திருவிழா - பொதுமக்கள் பங்கேற்க அனுமதி
மாநில செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ந்தேதி தொழில்நுட்ப திருவிழா - பொதுமக்கள் பங்கேற்க அனுமதி

தினத்தந்தி
|
21 Dec 2024 10:09 PM IST

சென்னை ஐ.ஐ.டி.யில் ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொழில்நுட்ப திருவிழா நடைபெற உள்ளது.

சென்னை,

சுமார் 65 ஆண்டுகளாக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் உயர் அறிவியல் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில், பல்வேறு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய மாணவர்கள் மட்டுமின்றி, சுமார் 18 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், 600-க்கும் மேற்பட்ட பேராசியர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. இயங்கி வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி.யில் ஒவ்வொரு ஆண்டும் 'சாஸ்திரா' என்ற பெயரில் தொழில்நுட்ப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தி, மற்ற உயர்கல்வி மாணவர்களுக்கும், தொழில்துறையினருக்கும் தங்கள் திறமையை எடுத்துக்காட்டும் விதமாக இந்த தொழில்நுட்ப திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் வரும் ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தொழில்நுட்ப திருவிழா நடைபெற உள்ளது. இந்த தொழில்நுட்ப திருவிழாவிற்கு சுமார் 60 ஆயிரம் மாணவர்கள் நேரில் வருகை தருவார்கள் என்றும், இணையதளம் வழியாக சுமார் 10 லட்சம் பேர் இதனை பார்வையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்ப திருவிழாவில் பொதுமக்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், வரும் 25-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்