< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ நகைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட்
|18 Dec 2024 10:09 PM IST
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
இதற்காக ஸ்டேட் வங்கியின் மூலம் மும்பையில் உள்ள அரசு உருக்கு ஆலைக்கு நகைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி நகைகளை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் நீதிபதி துரை ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.