< Back
மாநில செய்திகள்
28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2024 9:18 AM IST

28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரெயிலும் (12653), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12661), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12638), மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12636) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரெயிலும் (20684), ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20682), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20692),

ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை காரைக்காலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16176) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்