< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கல்பட்டில் 273 ஏரிகள் முழுமையாக நிரம்பின
|2 Dec 2024 9:27 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன.
சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்தது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன.
இந்தநிலையில், கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 273 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 273 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 193 ஏரிகள் 75 சதவீதமும், 51 ஏரிகள் 50 சதவீதம் அளவுக்கும் நிரம்பியதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.