24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Dec 2024 7:32 PM IST
டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9-ந்தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் , டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .
- 24 Dec 2024 7:04 PM IST
அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
- 24 Dec 2024 6:54 PM IST
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியீடு
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான போட்டியான இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
- 24 Dec 2024 6:48 PM IST
அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
- 24 Dec 2024 6:41 PM IST
தமிழ்நாட்டுக்கு 27-ந் தேதி வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- 24 Dec 2024 5:19 PM IST
உண்மையை மறைத்து ஆட்கொணர்வு மனு.. பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
மகளின் இருப்பிடம் தெரிந்திருந்தும், உண்மையை முழுமையாக கூறாமல் மகளைப் பார்க்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்காக, பெண் ஒருவருக்கு டெல்லி ஐகோர்ட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செயத்து.
அந்த பெண்ணின் மனு சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும், 10,000 ரூபாயை டெல்லி ஐகோர்ட்டின் சட்ட சேவைகள் குழுவிடம் மனுதாரர் 2 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- 24 Dec 2024 4:38 PM IST
நாடாளுமன்ற நேரம் வீணடிப்பு.. காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பட்னாவிஸ் சொல்கிறார்
டாக்டர் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டம் நாடகம் என்றும், நாடாளுமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மராட்டிய முதல் -மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
- 24 Dec 2024 4:35 PM IST
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 27-ந் தேதி சென்னை வரும் அமித்ஷா மறுநாள் திருவண்ணாமலை சென்று அருணாசலேசுவரர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய இருப்பதாகவும், அங்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
- 24 Dec 2024 3:58 PM IST
புதுச்சேரியில் மத்திய கல்வி பாடத்திட்டம் அமலில் இருப்பதால் மத்திய அரசு அறிவித்தபடி 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
- 24 Dec 2024 3:37 PM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இந்தியா ரூ.237 கோடி நிதி வழங்க உள்ளது.