< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 போலீசார் பணி இட மாற்றம்
|9 Nov 2024 7:53 PM IST
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெறும் போலீசார் குறைதீர்ப்பு முகாம்களிலும் பணியிட மாற்றம் கேட்டு போலீசார் அதிகளவில் மனு அளிந்திருந்தன
சென்னை,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருப்ப கோரிக்கை அடிப்படையில் இந்த பணியிட பணியிட மாற்ற உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக அவர், அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'போலீஸ்துறையின் சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், நிர்வாக ரீதியாக ஏற்கெனவே கடந்த ஒரு ஆண்டுக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், புகாரில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், விளையாட்டு போட்டிகளுக்காக பணிபுரிபவர்கள் ஆகியோர் இந்த பணியிட மாற்ற பட்டியலில் இருந்தால், அவர்களை ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்க வேண்டாம். அவர்கள் குறித்த தகவல்களை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.