< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்
|19 Oct 2024 2:56 PM IST
ஆந்திராவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சிபிசிஐடி அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வாழைப்பழம் ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் 100 கிலோ எடையுள்ள 10 கஞ்சா பார்சல்கள் கண்டறியப்பட்டது.
அத்துடன், வாகனத்தில் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்த போலீசார், மேலும் 100 கிலோ எடையுள்ள 10 பார்சல்களையும் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். மேலும், கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த 4 பேரையும் கைதுசெய்த போலீசார், ஒரு மினி லாரி மற்றும் ஒரு காரையும் பறிமுதல்செய்தனர்.