கிருஷ்ணகிரியில் மர்ம பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்
|கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் முருகன் (50) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை முருகனின் வீட்டில் மர்ம பொருள் ஒன்று தீடிரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வீட்டின் வாசற்படி கதவு உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகின. இதில் முருகனும், அவரது தந்தை அருணாசலமும் படுகாயம் அடைந்தனர்.
வெடி சத்தத்தை கேட்டு முருகனின் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் முருகனையும் அவரது தந்தையையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், வீட்டில் வெடித்த மர்ம பொருள் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.