< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
18 Nov 2024 4:11 PM IST

திருச்செந்தூர் கோவிலில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யானை மிதித்து பாகன் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

யானைக்கு பழம் கொடுக்க வந்த போது பாகன் உதயா மற்றும் அவருடன் வந்தவரை யானை மிதித்ததாகவும் இதில் படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்