< Back
மாநில செய்திகள்
அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை

தினத்தந்தி
|
21 Nov 2024 8:59 AM IST

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற ரெயில் அவா் உடல் மீது ஏறி இறங்கியது.

இதில் தலை துண்டித்து முகமது ரபீக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து முகமது ரபீக் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உள்ளார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற மற்றொரு ரெயில் மோதியதில் அவர் தலைதுண்டாகி பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சோ்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இது குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்